பைடன் மனைவிக்கு பிரதமர் மோடி அளித்த காஸ்ட்லி பரிசு! விலை எவ்வளவு தெரியுமா?
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு சென்ற பிரதமர் மோடி, அதிபர் பைடன் மனைவி ஜில் பைடனுக்கு வைர மோதிரத்தை பரிசாக வழங்கினார். சூரத்தில் உருவாக்கப்பட்ட அந்த வைரத்தின் மதிப்பு 20 ஆயிரம் அமெரிக்க டாலர், இந்திய ரூபாயில் 17 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயாகும். இதுவே 2023 ஆம் ஆண்டு ஜில் பைடனுக்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க சட்டப்படி டிரம்ப் அதிபராக பதவியேற்க உள்ள வேளையில் பைடன், அவரது மனைவிக்கு கிடைத்த பரிசுகள் அரசிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது. இருப்பினும் ஜில் பைடன் இந்த பரிசை திரும்ப பெற வாய்ப்பு உள்ளது. அதாவது அமெரிக்க தேசிய காப்பகத்திடம் இருந்து வைரத்துக்கான விலையை கொடுத்து ஜில் பைடன் வாங்கிக் கொள்ளலாம்.