`கடிச்சா நீ சட்னிதான்!' - சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு

Update: 2024-01-10 12:17 GMT

ஒடிசாவின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது...உலகெங்கிலும் பல சமூகங்கள் பூச்சிகளை உணவாக உண்ணுவதை வழக்கமாக வைத்துள்ளனர்... அதன்படி ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில், சிவப்பு எறும்பு சட்னி அதன் ஊட்டச்சத்துகள் மிகுந்த மருத்துவ குணங்களுக்கு மிகவும் புகழ்பெற்றது... பார்க்க தான் இது குட்டி எறும்பு... கடித்தால் ஊசி போட்டது போல் வலிதரும்... இவ்வகை எறும்புகளை மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பழங்குடியின குடும்பங்கள் சட்னி தயாரிக்க சேகரிக்கின்றனர்... அவை சுத்தம் செய்யப்பட்டு, உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் கலவையை அரைத்து சட்னி தயாரிக்கப்படுகிறது. ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற பிற கிழக்கு மாநிலங்களிலும் சிவப்பு எறும்பு சட்னி பிரபலம்... புரதம், கால்சியம், துத்தநாகம், வைட்டமின் பி-12, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன... இத்தகைய புகழ் நிறைந்த சிவப்பு எறும்பு சட்னிக்குத் தான் இப்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்