தமிழ்நாட்டில் கால் வைக்கப்போகும் அமித்ஷாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
வரும் 27 ஆம் தேதி மாலை சென்னை வரும் மதிய உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷாவிற்கு கருப்பு கொடி காட்டப்படும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார். இதில் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்வதோடு, அமித்ஷாவே திரும்பி போ என்ற முழக்கங்களை எழுப்புமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவருக்குரிய முக்கியத்துவத்தை கொடுத்து, அவர் மூலமாக உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டம் தான் இன்றைக்கும் 140 கோடி மக்களை பாதுகாத்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.