பெண் காவலர், எஸ்ஐ உட்பட 3 பேர் ஏரியில் குதித்து தற்கொலை?

Update: 2024-12-26 02:34 GMT

கமாரெட்டி மாவட்டத்தில் உள்ள அட்லுரு எல்லாரெட்டி பெத்த ஏரியில் 3 பேர் திடீரென குதித்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற போலீசார், தீயணைப்புத்துறையினருடன் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஸ்ருதி என்ற பெண் கான்ஸ்டபிளின் உடலும், பிபிபெட் காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றிய நிகில் என்பரது உடலும் மீட்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பிக்கினூர் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் சாய் குமாரின் உடலை தேடி போலீசார் வருகின்றனர். சம்பவ இடத்தில் கமாரெட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிந்து ஷர்மா ஆய்வு செய்தார். 3 பேரும் ஏரியில் தவறி விழுந்தார்களா? அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்