"62 லட்சம் மக்களின் நன்மைக்காக"..கென்-பெத்வா நதிகள் இணைப்பு..அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயியின் 100ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய பிரதேசம் மாநிலம் கஜுராகோவில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கென்-பெத்வா நதிகள் இணைப்பு திட்டம் என்பது யமுனையின்
இரண்டு கிளை நதிகளான கென் ஆற்றில் இருந்து பெட்வா நதிக்கு நீரை மாற்றும் திட்டமாகும். இந்தத் திட்டம் மத்தியப் பிரதேசத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதியை வழங்குவதுடன் பிராந்திய மக்களுக்கு குடிநீர்
வசதியையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்-பெட்வா இணைப்பு கால்வாய் 221 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும், இதில் 2 கிலோ மீட்டர் சுரங்கப்பாதையும் அடங்கும். 10.62 லட்சம் ஹெக்டேர்களுக்கு நீர்ப்பாசனம் அளிப்ப்தோடு சுமார் 62 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 103 மெகா வாட் நீர் மின்சாரத்தை உற்பத்தியோடு, 27 மெகா வாட் சூரிய சக்தி மின் உற்பத்தியும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.