சத்தீஸ்கர் மாநிலம் பீஜாப்பூர் மாவட்டத்தில் DRG எனப்படும் மாவட்ட பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் பயணம் செய்த வாகனத்தை, நக்சல்கள் வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் எட்டு வீரர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு சத்தீஸ்கர் மாநில அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய், வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து வீரர்களின் உடல் அடங்கிய பேழைகள் எடுத்துச் செல்லப்பட்டபோது, அதில் ஒரு ராணுவ வீரரின் உடல் இருந்த சவப்பெட்டியை முதல்வர் தன்னுடைய தோளில் சுமந்து சென்றார்.