தானாக இயங்கிய குப்பை வண்டி.. ஓட்டுனரை காரோடு வைத்து அமுக்கிய அதிர்ச்சி... பதற வைக்கும் வீடியோ

Update: 2025-01-07 14:31 GMT

தெலங்கானாவில் குப்பை அள்ளும் இயந்திரம் தானாக இயங்கியதில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். ஐதராபாத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மாநகராட்சி குப்பை அள்ளும் இயந்திரம், திடீரென தானாக நகர்ந்தது. மேலும் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில வாகனங்கள் மீது மோதி சேதப்படுத்தியது. அப்போது இயந்திரத்தை நிறுத்த முயன்ற ஓட்டுநரும் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இயந்திரத்தை தடுத்து நிறுத்தி நிலைமையை சீர் செய்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வரும் நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்