கடன் தொல்லையால் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான தங்கராஜ் என்பவர் தன் மகளின் திருமணத்திற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். சொற்ப வருமானத்தில், கடனை அடைக்கமுடியாமல் தங்கராஜ் குடும்பத்தினர் மிகுந்த மன வருத்தத்தில் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்து வந்துள்ளனர், இந்நிலையில், இன்று காலை தங்கராஜ் எழுந்து பார்க்கும் போது அவரது மனைவி அமுதா ராணி மற்றும் மகன் மெல்பின்ராஜ், குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தங்கராஜ், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பத்மநாபபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவர்களை பரிசோதித்த மருத்துவர் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.