பெற்ற மகனையே கிரிக்கெட் பேட்டால் அடித்தே கொன்ற தந்தை - கண்முன்னே துடிதுடித்து... அதிர்ந்த பெங்களூரு

Update: 2024-11-17 02:21 GMT

பெங்களூருவில் 14 வயது மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவின் குமாரசுவாமி லேஅவுட் பகுதியில் வசிக்கும் ரவிக்குமார் என்பவருக்கு 14 வயதில் தேஜஸ் என்ற மகன் இருந்தான்.

தேஜஸ் எந்நேரமும் செல்போன் பயன்படுத்தி வந்ததாகவும், அவரது நண்பர்களும் சரியில்லை என்று கூறி, அவரது தந்தை செல்போனை, கீழே போட்டு உடைத்துள்ளார். கைப்பேசியை சரிசெய்ய சொல்லி தேஜஸ் தந்தையிடம் வற்புறுத்தினார். ஆனால்,ரவிக்குமார் மறுத்துவிட்டார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த ரவிக்குமார் வீட்டில் இருந்த கிரிக்கெட் பேட்டால் மகன் தேஜஸை தாக்கினார்.

வலியில் துடித்த நிலையில், அவர் நாடகம் ஆடுவதாக கருதி அப்படியே விட்டுச்சென்றுள்ளார். சில மணி நேரம் கழித்தும் தேஜஸ் சுயநினைவிற்கு வராததால் சந்தேகம் அடைந்த ரவிக்குமார், தேஜஸை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் தேஜஸ்ஸை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகனின் மரணம் தன்னால் தான் நிகழ்ந்தது என்பதை மறைக்க ரவிக்குமார் முயற்சித்தார். ஆனால்,காவல்துறைக்கு அவரது வீட்டு அருகே வசிக்கும் ஒருவர் இச்சம்பவத்தைக் கூறியதின் அடிப்படையில், போலீசார் ரவிக்குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்