இறுதி அஞ்சலிக்கு எடுத்து செல்லப்பட்ட உடல்? - ஸ்பீட் பிரேக் தூக்கி போட்டதும் வந்த உயிர்

Update: 2025-01-03 03:37 GMT

மகாராஷ்டிராவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருவர், ஆம்புலன்ஸில் திடீரென உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தையும், நிம்மதியையும் வரவழைத்துள்ளது. இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு, ஆம்புலன்ஸில் உடலை கொண்டு சென்றனர். அப்போது ஆம்புலன்ஸ் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது, திடீரென பாண்டுரங்க உல்பேவின் கை விரல் அசைந்துள்ளது. இதனை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, உடனடியாக மருத்துவ பணியாளரிடம் கூறி, ஆம்புலன்ஸை வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கணவரை காப்பாற்றினார். இந்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்