வரலாற்றில் முதன்முறை... உச்சநீதிமன்றத்தில் `லாப்டா லேடீஸ்'..! வெளியான பின்னணி..!

Update: 2024-08-09 10:25 GMT

உச்சநீதிமன்றத்தில் பிரபல திரைப்படம் ஒன்று இன்று ஒளிபரப்பாகிறது... என்ன படம்?...நீதிமன்றத்தில் படத்தை ஒளிபரப்புவதற்கான காரணம் என்ன?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டு 75ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன...

இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளும்...அவர்களின் குடும்பத்தாரும் பார்த்து ரசிக்கும் வகையில் பாலிவுட் திரைப்படம் ஒன்று ஒளிபரப்பப்படுகிறது...

அது தான் பாலின சமத்துவம் பேசும் பாலிவுட் திரைப்படமான "லாபட்டா லேடீஸ்"...

ஆணாதிக்க மனநிலையிலிருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தை நகைச்சுவை கலந்த எளிமையான திரைக்கதை மூலம் அழகாக பேசியிருக்கிறது இத்திரைப்படம்...

இதை இயக்கியது யார் தெரியுமா?...

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் தான்...

மிக மிக எளிமையான திரைக்கதை... பாசாங்கில்லாத கதாபாத்திரங்கள்... சாதாரணமாகத் தோன்றினாலும் சக்தி வாய்ந்த வசனங்கள்...என அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்ட படம் தான் "லாபட்டா லேடீஸ்"...அதாவது "தொலைந்த பெண்கள்"...

திருமணமான 2 பெண்கள் தங்கள் கணவருடன் ஒரே ரயிலில் பயணிக்கும்போது மாறுதலாக வெவ்வேறு இடங்களுக்குச் சென்று விடுவதால் ஏற்படும் பின்விளைவுகள் தான் கதை...

பெண்களுக்கான சம உரிமையை பேசும் லாபட்டா லேடீஸை அமீர் கான்,கிரண் ராவ்,கோதி தேஷ்பாண்டே ஆகிய மூவரும் சேர்ந்து தயாரித்துள்ளனர்...

மிகக் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நல்ல வசூலை ஈட்டிய லாபட்டா லேடீஸ் உச்சநீதிமன்றத்தில் இன்று திரையிடப்படும் நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் குடும்பத்தாருடன் கண்டுகளிக்க உள்ளனர்...

படம் திரையிடலின்போது அமீர் கான் மற்றும் படத்தின் இயக்குநர் கிரண் ராவ் ஆகியோரும் உடனிருப்பர்...

உச்சநீதிமன்றத்தில் திரையிடப்பட பிரம்மாண்ட படங்களுக்குக் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை...

சமுதாயத்திற்கு லாபட்டா லேடீஸைப் போன்ற படங்கள் தான் தேவை என்பதையே இது உணர்த்துகிறது...

Tags:    

மேலும் செய்திகள்