JUSTIN || எதிர்பாரா நேரம் அடுத்த திடீர் கைது... அல்லு அர்ஜுன் தலையில் பேரிடி

Update: 2024-12-24 12:43 GMT

நடிகர் அல்லு அர்ஜுனின் பவுன்சர் அந்தோணியை போலீஸார் கைது செய்தனர்

.ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிசம்பர் 4 தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார்.

அப்பொழுது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த விவகாரம் தொடர்பாக சிக்கட்பள்ளி போலீசார் நேற்று விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் அல்லு அர்ஜுனின் தனி பாதுகாவலர் (பவுன்சர்) அந்தோணியை போலீஸாரை கைது செய்தனர்.

இவர்தான் சந்தியா தியேட்டரில் அல்லு செல்வதற்கான பவுன்சர்களை ஏற்பாடு செய்திருந்தாராம்.

Tags:    

மேலும் செய்திகள்