சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாலை 6.30 மணியளவில் உயிர் பிரிந்தது. 1934 டிசம்பர் 14-ல் பிறந்த ஷியாம் பெனகல், திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டவர். வங்கதேசத்தின் முதல் அதிபரான முஜிபுர் ரஹ்மான் வாழ்க்கை கதையை ‘முஜிப் த மேக்கிங் ஆப் எ நேஷன்' என்ற பெயரில் அவர் இயக்கிய படம் 2023ல் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. புனே ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியுட் ஆஃப் இந்தியாவின் தலைவராக இருந்துள்ளார். ‘எ சைல்ட் ஆஃப் தி ஸ்ட்ரீட்ஸ், ‘ஜவஹர்லால் நேரு, ‘சத்யஜித் ரே' உள்ளிட்ட இவரது ஆவணப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளை ஷியாம் பெனகல் பெற்றுள்ளளார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.