சரத்குமாரின் 150 வது படமான ‘தி ஸ்மைல் மேன்’ படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி ஸ்மைல் மேன்’ படத்தில் சரத்குமாருடன் இனியா, ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடித்துள்ளார். அம்னீஷியா நோயால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். திரில்லர் படமாக உருவாகியுள்ள ஸ்மைல் மேன் படம் டிசம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.