புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு படக்குழு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மகன் ஸ்ரீ தேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிறுவனை சந்தித்து அந்த ஆறுதல் கூறியதோடு, அவனது தந்தையிடம் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.