1997ல் மின்சாரக் கனவு, 2002ல் Lagaan இந்தி படம், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படங்கள் இவருக்கு தேசிய விருதுகளை அள்ளித் தந்தன.
இசையை உலகெங்கும் பரவச் செய்த பெருமைக்குரியவர் ரகுமான். அவரது ரசிகர்களுக்கு கடந்த ஆண்டு புயல்போல் வந்த பேரதிர்ச்சி, யாரும் எதிர்ப்பார்க்காத அவரது விவகாரத்து செய்தி.
தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்புகள் இருந்தாலும், இன்றும் தனது வசீகரக் குரலில் ரசிகர்களை இவர் கட்டிப் போட்டுள்ளார்.
ரோஜா திரைப்படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை.. பாடலில் சிறு பகுதியை பாடிய இவர், ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் ‘என்னை இழுக்குதுடி..‘ என்ற பாடலைப் பாடி 2k kids வரை Vibe-ஐ எகிற வைக்கிறார், ஏ.ஆர்.ரகுமான்.