2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு தகுதியுடைய படங்களின் பட்டியலில் கங்குவா இடம்பிடித்துள்ளது... சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான இப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.
ஆனால், திரையரங்கில் எதிர்பார்த்த வரவேற்பு இப்படத்திற்குக் கிடைக்கவில்லை என்றாலும் கூட, OTT-ல் கங்குவா படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் கங்குவா ஆஸ்கருக்குத் தகுதியுடைய படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மேலும் ப்ரித்விராஜின் ஆடுஜீவிதம் படமும் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.