கங்கை அமரன் இப்போது எப்படி உள்ளார்?

Update: 2025-01-07 04:48 GMT

பிரபல இசையமைப்பாளரும் சினிமா இயக்குனருமான கங்கை அமரன் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களாக சிவகங்கை மாவட்டத்தில் புதிய திரைப்படம் ஒன்றை கங்கை அமரன் இயக்கி வந்தார். நேற்று முன்தினம் திடீரென அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் உடனடியாக, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் கங்கை அமரன் அங்கிருந்து வேலம்மாள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்