551 கிலோ எடையிலான சிறுதானிய கேக்.. உணவு திருவிழாவில் உலக சாதனை

Update: 2023-03-11 05:37 GMT
  • சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற சிறுதானிய உணவு திருவிழாவில் 551 கிலோ எடையிலான சிறுதானிய கேக் செய்து சாதனை படைத்துள்ளனர்.
  • கிழக்கு தாம்பரத்தில் உள்ள ரயில்வே மைதானத்தில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தாம்பரம் மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்புத் துறை இணைந்து மாபெரும் சிறுதானிய உணவு பெருவிழா மற்றும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
  • இதில் 11 கல்லூரிகள் கலந்து கொண்டு சிறுதானிய உணவு பொருட்களை செய்து காட்சிப்படுத்தி அரங்குகளில் வைத்திருந்தனர்.
  • மேலும், சிறுதானியங்களை கொண்டு, 17 அடி நீளம், 7 அடி அகலம் என 551 கிலோ எடையிலான சிறுதானிய கேக்கை செய்து, டிரம்ப்வேர்ல்டு சாதலை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
  • இந்த விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆட்சியர் ராகுல்நாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்