விசிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா..! கேக் வெட்டி கொண்டாடிய திருமாவளவன் | VCK

Update: 2024-12-22 02:36 GMT

விழாவில் திருமாவளவன், வன்னியரசு, விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள், ஜீசஸ் கால்ஸ் நிறுவனர் டாக்டர் பால் தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய பால் தினகரன், மக்களின் குறைகளை தீர்க்கும் மேய்ப்பராக திருமாவளவன் உள்ளார் என நெகிழ்ந்தார். திருமாவளவன் சரியான தூக்கமில்லை என சொல்கிறார், அவருக்கு பிரதான மேய்ப்பர் ஏயேசுபிரான் ஆசிர்வதிக்கட்டும் என பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து பேசிய திருமாவளவன், எங்கள் மதத்தை ஏன் குறை சொல்கிறீர்கள்? என கேட்பவர்களுக்கு சகோதரத்துவத்தை போதிக்கும் மதங்களை வரவேற்கிறோம் என பதில் கூறினார். விழாவில் பால் தினகரனும், திருமாவளவனும் கேக் வெட்டினர். பெரிய கேக் வந்த பார்சலில் கத்தி இல்லாத காரணத்தால் பரிசு பெட்டியின் அட்டையை கிழித்து கத்தியை உருவாக்கி கேக்கை வெட்டிய திருமாவளவன், அன்போடு பால் தினகரனுக்கு ஊட்டிவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்