``சுத்த பொய்.. இங்க பாருங்க’’ - பேப்பரை காட்டி சீறிய எடப்பாடி

Update: 2024-12-22 02:37 GMT

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ லைட் அரங்கத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைப்பெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசியவர், அண்டை மாநிலங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் கொட்டுப்படுகிறது என கண்டனம் தெரிவித்தார். டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகுதான், சுரங்கத்திற்கு எதிராக தமிழக அரசு கடிதம் எழுதியதாகவும், யாருக்கோ திமுக அரசு உதவுகிறது என குற்றம் சாட்டினார். செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால்தான் சென்னையில் வெள்ளம் என முதல்வர் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்வதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்