இதற்கு மட்டும் `0% GST’ - வயிற்றில் பாலை வார்த்த நிதியமைச்சர்

Update: 2024-12-22 02:44 GMT

ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், மரபணு சிகிச்சைக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது என்றார். செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது என்றார். புதிய எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையின் மீது ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்