குவைத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் - பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேச்சு
இந்தியாவும், குவைத்தும் அரேபிய கடலின் இரண்டு கரையில் அமைந்துள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, அது நம்மை இணைக்கும் ராஜதந்திரம் மட்டுமல்ல இதயத்தின் பிணைப்புகள் என்றார். இந்திய சமூகத்தின் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் குவைத்தின் மருத்துவ உள்கட்டமைப்பின் முக்கிய பலமாக திகழ்கின்றனர் என பாராட்டி குவைத்தில் வருங்கால தலைமுறையினரை வடிவமைக்க இந்திய ஆசிரியர்கள் உதவி வருவதாக தெரிவித்தார். மொபைல் போன் உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது என்றார். பணம் அனுப்புவதில் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, குவைத் நாட்டில் கடின உழைப்பாளிளாக பணியாற்றி வரும் இந்தியர்கள் அனைவருக்கும் இந்த பெருமை சேரும் என குறிப்பிட்டார். புதிய குவைத்திற்கு தேவையான மனித வளம் தொழில்நுட்பம் திறமை ஆகியவை இந்தியாவிடம் இருப்பதாக தெரிவித்த பிரதமர், இந்திய மக்கள் 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பாடுபடுவதாக தெரிவித்தார்.