``இவங்கலாம் மனுசன் தானா?'' -அல்லுவின் இன்னொரு முகம்.. அலறவிட்ட தெலங்கானா CM
தெலங்கானாவில் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் கிடையாது என்று, அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார். தெலங்கானா சட்டசபையில் அல்லு அர்ஜுன் விவகாரம் குறித்து ரேவந்த் ரெட்டி பேசினார். அப்போது, கூட்டத்தை சமாளிக்க முடியாது என காவல்துறை தெரிவித்ததையும் மீறி,, புஷ்பா 2 படத்தின் கதாநாயகன் காரின் ரூஃப் வழியாக ஷோ காட்டியதாக கூறினார். .இவர்கள் எல்லாம் எந்த மாதிரியான ஒரு மனிதர்கள்? என்றும், இவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்லக் கூடாதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்