CM ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு - இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்
நடப்பாண்டிற்கான திமுக செயற்குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற உள்ளது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய விவகாரம், தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.