மீண்டும் கேப்டனாகிறாரா ஷகிப் அல் ஹசன்?
மீண்டும் கேப்டனாகிறாரா ஷகிப் அல் ஹசன்?
வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மொனிமுல் ஹக், விலகி உள்ளார். சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வங்கதேசம் இழந்தது. இதில் கேப்டன் மொனிமுல் ஹக் மோசமாக விளையாடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக மொனிமுல் ஹக் அறிவித்து உள்ளார். இதனிடையே, ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்ஹசன் மீண்டும் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.