விழாவில் கொந்தளித்த தேமுதிக கவுன்சிலர் - வந்த வழி திரும்பி சென்ற திமுக MLA

Update: 2023-06-10 02:51 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஊராட்சி மன்ற கட்டிட திறப்பு விழாவின் போது, தேமுதிக கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருங்கல் கிராமத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் 23.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக செய்யாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி வருகை தந்தார். அப்போது திடீரென தேமுதிக கவுன்சிலர் சங்கர், கல்வெட்டில் தனது பெயர் இடம்பெறாதை கண்டித்து அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் எம்.எல்.ஏ ஜோதி நிகழ்ச்சியை நடத்தாமல் திரும்பிச் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்