மதுரை மாவட்டம் கச்சிராயன்பட்டி கிராமத்தில், பட்டா மாறுதலுக்கு ஏழாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் துரைபாண்டியன் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட பாக்கியலட்சுமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் ராணுவ வீரரான மலைச்செல்வம் என்பவர் தன் தந்தை ராமு பெயரில் உள்ள நிலத்திற்கு தனது பெயரில் பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், அவரிடம் கிராம நிர்வாக அலுவலர் துரைப்பாண்டியன் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக மலைச்செல்வம் அளித்த புகாரின் பேரில் லஞ்சம் வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.