சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பனை தொழிலாளி வீட்டில் 42 சவரன் தங்க நகைகள், 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கம்பட்டியில் ராஜி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வேலைக்கு சென்ற நிலையில், மனைவி மருத்துவமனையில் உள்ள உறவினரை பார்க்க சென்றிருக்கிறார். இந்நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.