குமரி மாவட்டத்தில் திடீரென ஆக்ரோஷமாக மாறிய கடல் அலைகளால் ராமன் துறை மீனவ கிராமத்தில் அலை தடுப்பு சுவர் சேதமடைந்து, வீடுகளுக்குள் கடல்நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாதிக்கப்பட்ட அலை தடுப்பு சுவரை சீரமைத்து, நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் விதமாக கடல் நடுவே தூண்டில் வளைவு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.