மாமியாரை பழிவாங்க திருடியான மருமகள் -போலீசையே மிரளவிட்ட லேட்டஸ்ட் டெக்னிக்

Update: 2025-04-16 07:30 GMT

ஜோலார்பேட்டை அருகே மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவியும் கட்டையால் தாக்கியும் 4 சவரன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவத்தில், மருமகளே மாமியாரிடம் நகை பறித்தது அம்பலமாகி உள்ளது. மண்டலவாடியில் கணவருடன் தனியாக வசித்து வந்த கனகா என்ற மூதாட்டியைத் தாக்கி, மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், கனகாவின் மருமகள் வசந்தியே, தனது உறவினருடன் சேர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அடிக்கடி தகராறு செய்யும் மாமியாரை பழிவாங்கவே, நகை பறிப்பில் ஈடுபட்டதாக வசந்தி தெரிவித்தார். இதையடுத்து, வசந்தி மற்றும் உறவினரான மைக்கேல் ராஜை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்