எதிர்த்து சண்டை செய்யும் ஆம்ஸ்ட்ராங் மனைவி - மேலிடம் என்ன சொல்கிறது?

Update: 2025-04-16 07:34 GMT

கட்சி பொறுப்பில் இருந்து தன்னை நீக்குவதற்கு பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை என ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி கூறியுள்ளார். மாநில பொறுப்பில் உள்ள தன்னை நீக்குவதற்கு தேசிய தலைவர்களால் மட்டுமே முடியும் என்றும், தன்னை நீக்க ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தார். தன் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்