அமைச்சர் பொன்முடிக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் அதிர்ச்சி
பெண்களையும், இந்து மத அடையாளங்களையும் இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி நெல்லை டவுன் பகுதியில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், அவர்களுடன் இந்து முன்னணியினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.