தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு -யுபிஎஸ்சி மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க - திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை
கொரோனா தொற்றால் தேர்வு எழுத முடியாமல் போன யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்தார். பூஜ்ய நேரத்தில் பேசிய அவர், தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் இத்தகைய தேர்வுகளை எழுத முடியாததால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
எனவே, தேர்வுகளை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.