அண்ணா பல்கலை. கொடூரம்... களத்தில் இறங்கும் VVIP.. ஈபிஎஸ் திடீர் அறிவிப்பு

Update: 2024-12-28 02:27 GMT

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி, இன்று ஆய்வு செய்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று, அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் வேளையில், பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து புகார் அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளன. இத்தகைய சூழலில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று மதியம் ஆய்வு செய்கிறார். அப்போது பல்கலைக்கழக பேரசிரியர்கள், ஊழியர்களிடம் அங்கிருக்கும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கேட்டறிகிறார். பல்கலைக்கழக பதிவாளரிடமும் ஆளுநர் ஆர்.என். ரவி விசாரிப்பார் எனவும் தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்