கள்ளக்காதலியுடன் நண்பர் உல்லாசம் - ஆத்திரம் தலைக்கேறிய காதலன்.. சென்னையில் பகீர் சம்பவம் | Chennai

Update: 2024-12-28 02:19 GMT

சென்னையைச் டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த நிலையில், ஏற்கனவே கணவரை பிரிந்து தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மீனாட்சி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அமைந்தகரையில் வாடகை வீட்டில் ஜோடியாக வசித்து வந்துள்ளனர். இந்த சூழலில், மோகன்ராஜின் நண்பரான ராமச்சந்திரனுடன் சேர்ந்து மூவரும் வீட்டில் மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தில், மூவரும் மது அருந்தியதாகவும், நள்ளிரவு மோகன்ராஜ் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்த போது, ராமச்சந்திரனும் - மீனாட்சியும் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆத்திரத்தில் மோகன்ராஜ் இருவரையும் தாக்கியதாக கூறப்படும் நிலையில், காலையில் மயங்கி கிடந்த ராமச்சந்திரனை இருவரும் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மோகன்ராஜ், மீனாட்சியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும்.

Tags:    

மேலும் செய்திகள்