இமாச்சல் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. குறிப்பாக சோலாங் பள்ளத்தாக்கில் கடும் பனிப்பொழிவால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. மறுபக்கம், பனிபடர்ந்து வெண்ணிறத்தில் மலைகள் காட்சியளிக்கும் வீடியோ பார்ப்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் கொட்டும் பனிப்பொழிவால் சாலைகள் பனிபடர்ந்து வெண்ணிறத்தில் காட்சியளிக்கின்றன. கடந்த சில நாட்களாக பனிமழை கொட்டித்தீர்ப்பதால், சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசித்தபடி உற்சாகமாக பொழுதை போக்குகின்றனர். இதில் கந்தர்பால் பகுதியில் பனிக்கட்டிகளில் சிக்கி முன்னேற முடியாமல் தவிக்கும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் உதவிக்கரம் நீட்டி போக்குவரத்தை சீர்செய்தனர்.