"இனிமே ஊர்ப்பக்கம் நீங்க வரக்கூடாது" - தவிக்கும் மக்கள் | Chengalpattu | Thanthi TV

Update: 2024-12-28 02:26 GMT

கொக்கிலமேடு மீனவர் கிராமத்தில் மழைநீர் கால்வாய் அமைத்தது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மீனவ பஞ்சாயத்தாருக்கும், கொக்கிலமேடு ஊராட்சி துணைத்தலைவர் ராஜாத்திக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது, இருதரப்பையும் மாமல்லபுரம் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர் கொக்கிலமேடு மீனவர் பஞ்சாயத்தார், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜாத்தி வெங்கடேசன் குடும்பத்தி‌னர் உள்ளிட்ட 7 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில் ராஜாத்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேரின் வீடு சூரையாடப்பட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த எட்டு பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து துணைதலைவர் ராஜாத்தியின் ஆதரவாளர்களாக இருந்த 27 குடும்பத்தை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு கோரி செங்கல்பட்டு எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்