வீட்டில் சடலமாக கிடந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் - வைரலாகும் கடைசி வீடியோ | Insta Fame | Thanthi TV

Update: 2024-12-28 02:31 GMT

இன்ஸ்டாகிராம் பிரபலமான சிம்ரன் சிங் என்ற இளம்பெண், மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 25 வயதான முன்னாள் ரேடியோ ஜாக்கி சிம்ரன் சிங், இன்ஸ்டாகிராமில் சுமார் ஏழரை லட்சம் ஃபாலோயர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள அவரது வீட்டில், சிம்ரன் சிங் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கதவுகள் உள்ளே பூட்டப்பட்டிருந்ததால், சிம்ரன் சிங் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சிம்ரன் சிங் கடைசியாக பதிவிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்