பாபட்டலாவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரோஜா, ரஜினிகாந்த்தின் பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், 2003 ஆம் ஆண்டுடன் தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலம் முடிந்து விட்டது. அதன்பின் இப்போது இருபது ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது ஐதராபாத் நகரம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். எனவே, ஐதராபாத் பகுதியை ஆட்சி செய்யாத சந்திரபாபு நாயுடு அந்த நகரின் வளர்ச்சிக்கு எப்படி காரணமாக இருக்க முடியும் என்பதை ரஜினிகாந்த் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார். மேலும், என்.டி. ராமராவின் மரணத்திற்கு காரணமே சந்திரபாபு நாயுடு தான் என்பது அனைவருக்கும் தெரியும் என பேசிய அமைச்சர் ரோஜா, அவரின் ஆசி சந்திரபாபு நாயுடுக்கு எப்படி கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.