389 கைதிகள் பொது மன்னிப்பில் விடுவிப்பு - கைதிகளுக்கு இன்ப அதிர்ச்சி | Srilanka | Jail | Thanthi TV
இலங்கையில், கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 389 சிறைக்கைதிகளுக்கு அந்நாட்டு அதிபர் அனுரகுமார திசநாயக்க பொதுமன்னிப்பு வழங்கினார். இதுகுறித்து இலங்கை சிறைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் உள்ள 4 பெண்கள் உள்பட 389 கைதிகள், புதன்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி சிறப்பு பொது மன்னிப்பு அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்களும், அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.