மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழா திருத்தேரோட்டம் - தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா, கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக, திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. நான்கு மாட வீதிகள் வழியாக தேர் வலம் வந்தபோது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். காவல்துறை சார்பில், உயர் கோபுரங்கள் அமைத்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது. 63 நாயன்மார்கள் வீதி உலா நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.