"தவறுகளை திருத்தவேண்டும்".. "தட்டிவிட்டு பின்னர் தடவி கொடுக்ககூடாது" - சிபிஎம் முன்னாள் எம்பி. டி.கே.ரங்கராஜன்

Update: 2023-05-05 11:34 GMT

சிபிஎம் முன்னாள் எம்பி. டி.கே.ரங்கராஜன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முரசொலி நாளிதழ் இன்று விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தை திமுக அரசு ஆட்சி செய்கிறதா அல்லது அதிகாரிகளும், முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா என விமர்சனத்தை முன்வைத்த சிபிஎம்-ன் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜனைக் கடுமையாக விமர்சித்துள்ளது

திமுகவின் அதிகாரப்பூர்வ நாடேளான முரசொலி... கூட்டணி கட்சியான . டி.கே. ரங்கராஜன் கோயம்பேட்டில் நடந்த மே தின விழாவில் பேசும்போது, தமிழக அரசு குறித்து தவறான கருத்துக்களை உருவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் தோழமை என்பது சுட்டிக்காட்டிய தவறுகளை திருத்துவதாக அமைய வேண்டுமே தவிர வேகமாக தட்டிவிட்டு பின்னர் தடவி கொடுப்பதாக அமைந்து விடக்கூடாது என்றும், சுயமரியாதை என்பது திமுக கூட்டணியின் அடித்தளம், நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக விளங்கட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்