ஆன்லைன் ரம்மி விளையாட ஆரம்பித்த மகன் ஆகாஷ்...விளையாட்டில் பணத்தை இழந்த மகன் தூக்கிட்டு தற்கொலை

Update: 2024-12-22 06:36 GMT

தலைவனை இழந்த குடும்பத்தைக் காப்பாற்றி வந்த தாய்க்கு திடீரென கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூற இரு மகன்களுக்கு ஏற்பட்ட பரிதவிப்பை வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை

தாயை எப்படியும் காப்பாற்றி விடலாம் என்பதற்காக அவரது வாழ்நாளை மேலும் சில வருடங்கள் நீடிக்க வைக்கும் சிகிச்சைக்கான பணத்தை எடுத்து அவரது மகன் செய்த காரியம் குடும்பத்தைக் கதிகலங்க வைத்திருக்கிறது..

சென்னை சைதாப்பேட்டையை அடுத்துள்ள சின்னமலைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்துவிட்டு கேட்டரிங் வேலைகளைப் பார்த்து வருகிறார்.

இவரது தந்தை தேவராஜ் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து குடும்ப பாரத்தை தனது தோள்களில் சுமந்து வந்த தாய் மோதி தனது இரு மகன்களையும் தன்னால் இயன்ற வரை படிக்கவைத்து இருக்கிறார். மகன்கள் இருவரும் ஓரளவுக்குச் சம்பாதிக்கத் தொடங்கி குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து இருக்கின்றனர்

இந்த நிலையில் மோதி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டதால் குடும்பமே என்ன செய்வது என தெரியாமல் நாட்களைக் கடத்தி வந்து இருக்கிறார்கள்.நோயானது நான்காவது கட்டத்திற்குச் சென்றதால் தாய் படும் வேதனையைக் காண முடியாத இளைய மகனுக்குத் தோன்றி யோசனை தான் தற்போது அந்த குடும்பத்தை மீளா துயரில் கொண்டு வந்து விட்டிருக்கிறது

ஆன்லைன் ரம்மி விளம்பரத்தைப் பார்த்த இளைய மகன் ஆகாஷ் அதில் சிறிய தொகையை வைத்து விளையாடி இருக்கிறார். அதில் லாபம் கிடைத்ததால், இதில் நிறையப் பணம் வைத்து விளையாண்டால் கிடைக்கும் லாபத்தை வைத்து தாயின் நோய்க்குத் தரமான சிகிச்சை அளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்.

அதற்காகத் தாய்க்கு கீமோ சிகிச்சை அளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ 30 ஆயிரத்தை எடுத்து ரம்மி விளையாண்டு இருக்கிறார். ஆனால் எந்த லாபமும் கிடைக்காமல் கையிலிருந்த பணத்தையும் இழந்ததால் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறார். தாய் கேட்டால் என்ன சொல்வது எனத் தெரியாமல் தவித்த மகன் குற்ற உணர்ச்சியைத் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்து கொண்டு இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்