கரூரில் தலையை அறுத்து கொல்லப்பட்ட ரவுடி.. இறங்கி செய்த 17 வயது சுள்ளான் - திடீர் திருப்பம்

Update: 2024-12-22 06:28 GMT

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேட்டு மகாதானபுரம் கட்டளை மேட்டு வாய்க்கால் கரை அருகே, அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த ரவுடி காளிதாஸ் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில், மேட்டு மகாதானப்புரத்தைச் சேர்ந்த பூபாலன், சண்முக வடிவேல் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். பூபாலன், தடுமாறி கீழே விழுந்ததில் மாவுக்கட்டுடன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சண்முகவடிவேல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கம்மநல்லூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் விஷ்ணு, திருச்சி சிறார் சிறையில் உள்ளார். இவ்வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்