பொது இடங்களில் மின் விபத்துகளால் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக மின்வாரியம் உயர்த்தியுள்ளது.
புயல்,கனமழை போன்ற காலங்களில் மின்கசிவு ஏற்பட்டும், மின் கம்பி அறுந்து விழுந்தும் அவ்வப் போது விபத்துகள் நிகழ்கின்றன.
இதுபோன்ற பொது இடங்களில் ஏற்படும் மின் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்தி னர்களுக்கு மின்வாரியம் சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுகிறது.
உயிர் பிழைத்தவர்களுக்கு 2 கண்கள் அல்லது கை, கால்கள் இழந்திருந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தலா ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாகவும்,
ஒரு கண் அல்லது ஒரு கை, கால் இழந்தவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தலா ரூ. 1 லட்சத்தி லிருந்து ரூ. 1.50 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதில், மின் விபத்துகளால், உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் தலா ரூ.25,000 நிவாரணத் தொகையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை