தோண்டி எடுக்கப்படும் பழைய போன் உரையாடல்கள்.. உள்ளே என்ட்ரியான BSNL.. வேகமெடுக்கும் கொடநாடு கேஸ்

Update: 2024-12-22 06:14 GMT

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மொபைல் போன் உரையாடல்களை சேகரிக்க 2 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக பல்கலைக்கழகம் செலுத்த வேண்டும் என பிஎஸ்என்எல் நிறுவனம் மனுதாக்கல் செய்துள்ளது.

கொடநாடு கொலை கொள்ளை தொடர்பான மொபைல்போன் உரையாடல்களை திரட்ட சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பதிவாகியுள்ள பதிவுகளை சேகரிக்க, குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக பல்கலைக்கழகம் மூலம் சிபிசிஐடி முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அதற்கு 2.94 கோடி ரூபாய் செலவாகும் எனவும் அதனை தேசிய தடயவியல் ஆய்வக பல்கலைக்கழகம் செலுத்த வேண்டும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக பல்கலைகழகத்திற்கு நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது. பணத்தை யார் செலுத்த வேண்டும் என்பதை சேலம் நீதிமன்றம் தெரிவித்த பின்னர் சிபிசிஐடி வழக்கு விசாரணை வேகமாக முன்னெடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்