சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு பயணிகளுடன், தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, அதிகாலையில் திட்டக்குடி அடுத்துள்ள அதர்நத்தம் கைகாட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி செல்லும் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த ராமநத்தம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.