சென்னையில் சாலை விபத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த விஷ்ணு, பம்மலை சேர்ந்த விஷ்ணு ஆகியோர் நேற்று இரவு பள்ளிக்கரணையில் உள்ள நண்பர் வீட்டில் நடந்த பார்ட்டியில் பங்கேற்றதாக தெரிகிறது. மது பாட்டில்கள் காலியானதால் அதிகாலை 4 மணி அளவில் கோகுல் மற்றும் விஷ்ணு ஆகியோர் வேளச்சேரிக்கு சென்றுள்ளனர். அவர்கள் மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு திரும்பி வரும்போது வேளச்சேரி 200 அடி சாலையில் உள்ள சென்டர் மீடியனில் வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.