மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா துவக்கத்தை முன்னிட்டு பராசக்தி திரைப்படம் குறித்து அவரது மகளும், எம்.பியுமான கனிமொழி சிலாகித்துள்ளார். பராசக்தி சிறப்பு திரையிடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில், இதில் கனிமொழி, நடிகர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய எம்.பி கனிமொழி, நவீனத் தமிழ்ச் சிந்தனை மரபிற்கும், முற்போக்கு கலை வடிவத்திற்கும் சான்றாக இருக்கும் பராசக்தி, இன்னும் எத்தனை காலமானாலும் புதுமை குறையாது ஆச்சரியமூட்டும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.